PLEASE CONTACT:

KANNAN (M): 9789944123
RADHA (M): 9790836441

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

இல்லறம் என்பது நல்லறமாகும்

Marriages are made Here

Brahmins Horoscope Exchange

ஜாதக பரிவர்த்தனை சேவை

மகாலிங்கபுரம் பிள்ளையார் கோவில், சாய் சங்கரா பரிவர்த்தனை போன்ற சென்னை அமைப்புகளுடன் இச்சேவையை செய்துவந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கர மட் என்ற பொதுஜன ஜாதகப் பரிவர்த்தனை, பெற்றோர் சந்திப்பு அமைப்பை நடத்திவந்த திரு. T.A. கோபால் அவர்கள், brahminshoroscopeexchange.com (பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை) எனும் இத்தளத்தின் மூலம் பணிகளை மேம்படுத்தி மேலும் பலர் பயனுற வழிவகுத்துள்ளார்.

காஞ்சி மாமுனிவரின் பேரன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான திரு. கோபால் அவர்கள் சுவாமிகளின் விருப்பப்படி இந்தச் சத் காரியத்தை 19 வருடங்களாகச் செய்துவந்தார். பிராம்மணர்களின் பிரிவுகளில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது, ஐயர், ஐயங்கார், தெலுங்கு, கன்னட, மாத்வா, மராட்டி, கொங்கனி பிராம்மணர்கள் மற்றும் குருக்கள், அர்ச்சகர்கள் ஆகிய அனைத்துப் பிரிவு வரன், வதுக்களின் ஜாதகங்களைப் பெற்று, மாதம் ஒரு முறை பெற்றோர்கள் சந்திப்பை ஏற்படுத்தி, அந்நிகழ்ச்சிகளில் அவ்வித ஜாதகக் குறிப்புப் பட்டியல்களை வழங்கிவந்தார்.

சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், பெங்களூர், கோயமுத்தூர், சேலம், திருவனந்தபுரம், ஹொசூர், பூனா, தஞ்சாவூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, கரூர், அலஹாபாத், கல்கத்தா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மாதந்தோறும் இச்சேவையை நடத்திவந்தார் பரோபகாரி கோபால் அவர்கள்.

இச்சேவைக்காகப் பெற்றோர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் 6 மாதங்களுக்கு ரூ. 300/- மட்டுமே.

SRI KANCHI KAMAKOTI PEETAM
NO.148/257, THAMBU CHETTY STREET
CHENNAI – 600 001
DAILY 9 AM TO 8 PM
SRI. KANNAN (M: 9789944123) CHENNAI

Designed and maintained by AKR Consultants