PLEASE CONTACT:

KANNAN (M): 9789944123
RADHA (M): 9790836441

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - கட்டுரைகள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

இல்லறமல்லது நல்லறமன்று


"இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளூம் இல்லாளே யாமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூராய் விடும்"

என்று மூதாட்டி ஔவை கூறியுள்ளார். இறைவனின் தேவியருக்கே இல்லாள் என்னும் பெருமை உண்டு. நம் எல்லோரையும் ரக்‌ஷிக்கும் இறைவனே இல்லறத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்று நினைக்கும் போதே இல்லறத்தின் பெருமை விளங்குகிறது. இல்லறம் என்பதே விலங்கினங்களிடமிருந்து மாறுபட்டு மேன்மையான மக்களாய் வாழ ஏற்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட இல்லறத்தின் மேன்மையை உணர்ந்து, நம்மைப் பெற்றவர்கள் நாம் உரிய வயதுக்கு வந்தவுடன் திருமணம் என்னும் பந்தத்தை ஏற்படுத்தி நம்மை சுகமாக வாழவைத்திருக்கின்றர்.

அது போல நாமும் நம் குழந்தைகளின் மேன்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் கடமை நமக்கிருக்கிறதல்லவா?

நம் குழந்தைகள் நம் வம்சம் அல்லவா? நம் வம்சம் பெருகி வளர நம் குழந்தைகளுக்குத் தகுந்த மங்கலமான வரனைத் தேடி மங்களமாய் வாழ நாமும் உறுதுணையாய் அவர்களுக்குத் தகுந்த இல்லறத் துணையைத் தேர்ந்தெடுத்து அவர்களின் சுகமான வாழ்க்கைக்கு நல்லதொரு வழி அமைத்துக் கொடுக்க ஒரு எளிய வழி இருக்கிறது. அதுவே ஜாதகப்பொருத்தம் பார்த்தல். நம்முடைய பிறந்த நேரம், நாம் பிறந்த நேரத்தில் என்ன நக்‌ஷத்திரத்தில் பிறந்திருக்கிறோம், என்ன ராசியில் பிறந்திருக்கிறோம், நாம் பிறக்கும் போது நவக்ரகங்களின் அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதையெல்லாம் பூகோள ரீதியாக, கணித ரீதியாக, உளவியல் ரீதியாக, மெய்ஞானபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் கணித்து நம் வாழ்வில் நாம் எப்படி வாழ்வோம் என்று வல்லுனர்களின் மூலமாக கணிப்பதற்கு வசதியாகத்தான் ஜாதகம் எழுதினர் நம் முன்னோர்.

நம் மேல் அக்கறை கொண்டு நம் முன்னோர், ஆன்றோர் ஏற்படுத்தி வைத்த நல்ல வழிகளை நாமும் கடைபிடித்து நலமாய் வாழ்வோம்.

இரு குடும்பங்களையும், ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் திருமணம் எனும் பந்தத்தில் இணைக்கும் முன், அவர்களது பிறப்பின் ஆதாரமான ஜாதகங்களை எடுத்து இரு ஜாதகங்களிலும் உள்ள

1. தினப்பொருத்தம் 2. கணப்பொருத்தம் 3. மாகேந்திரப் பொருத்தம் 4. ஸ்திரீ தீர்க்கப்பொருத்தம் 5. யோனிப் பொருத்தம் 6. ராசி பொருத்தம் 7. ராசி அதிபதி பொருத்தம் 8. வேதைப் பொருத்தம் 9. வசியப் பொருத்தம் 10. ரஜ்ஜுப் பொருத்தம்

இவற்றோடு கோத்திரப் பொருத்தம், நக்‌ஷத்திரப்பொருத்தம், தசாபுக்திகளின் பலன்கள் ஆகியவைகளுடன் குழந்தை பாக்கியம், எதிர்கால தன தான்ய யோகங்கள் ஆகிய பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதன் மூலமாக அந்தத் தம்பதிகள் வாழ்க்கையில் எப்படி வாழ்வார்கள் என்பதைக் கணித்து, அதன் கூடவே இரு குடும்பங்களின் யோக்யதாம்சங்களையும் இரு குடும்பத்தாரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பட்டதே ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்னும் நிகழ்ச்சி.

Designed and maintained by AKR Consultants