PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!

அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க. இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல். கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா? இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?

எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா? ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.

இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants