PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

சில தெரிந்த ஆனால் முக்கியத் தகவல்கள் நினைவூட்டலுக்கு!

நம் நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆங்கிலேயர் வந்த பின்னரே இங்குள்ள குருகுல முறைகள் அனைத்தும் சிதற ஆரம்பித்தன. அவர்கள் வந்ததும் இங்கே தெரிந்து கொண்ட முக்கியமான விஷயம். ஏழை பிராமணனாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ள மதிப்பையும், அரசர்கள் முதல் அனைவரும் அவர்களை ஆசாரியர்களாக மதிப்பதையும் பார்த்துப் புரிந்து கொண்டான். ஆசாரியர்களுக்கு இருக்கும் மதிப்பு அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அடுத்துப் பசுக்கள் வழிபடப் படுவது. கோயில்களின் முக்கியத்துவம். அந்தக் கோயில்கள் யாத்திரிகர்களுக்குப் புகலிடமாகவும் இடம் கொடுப்பது. கோயிலின் அர்ச்சகர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம். அரசன் முதல் கடைசிக் குடிமகன் வரை அவர்களுக்குச் செலுத்தி வந்த மரியாதை. ஆகவே இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் உள்நாட்டு விஷயங்களில் புகுந்து முதலில் குருகுல முறைக் கல்வியை ஒழித்துக் கட்டினார்கள். ஆங்கிலக் கல்வி தான் உயர்ந்தது; இந்தியக் கல்வி முறையில் எதுவும் இல்லை என்ற எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் புகட்டினார்கள்.

அடுத்து அவர்கள் செய்தது நம் விவசாய முறையை அழிக்க ஆரம்பித்தது. பசுக்கள் தான் விவசாயத்துக்கு முக்கியம். அவைகள் ஈனும் காளைகளே நிலத்தை உழுதுப் பண்படுத்தப் பயன்பட்டு வந்தன. ராபர்ட் க்ளைவ் இதை ஆய்ந்து ஆராய்ந்து பசுக்களே இந்திய விவசாயத்தின் முக்கிய முதுகெலும்பாக இருப்பதை உணர்ந்து அதையும் ஒழிக்க நினைத்தார். இந்தியாவின் முதல் மாட்டு மாமிசம் தயாரிக்கும் இடம் 1760 ஆம் ஆண்டு ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பதாயிரம் பசுக்களைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாய் வங்காளத்தில் மக்களை விடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. பசுக்களைக் கொல்ல ஆரம்பித்துவிட்டால் இயற்கை உரங்கள் கிடைக்காது. பசு மாட்டின் மூத்திரம் பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்தது. அதுவும் கிடைக்காது.

1740 ஆம் ஆண்டு இந்தியாவில், குறிப்பாய்த் தமிழ்நாட்டில் ஆர்காடு மாவட்டத்தில் 54 க்வின்டால் அரிசி ஒரு ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யப் பட்டது. இதற்குப் பயன்பட்டவை இயற்கை உரங்களே. பூச்சிக் கொல்லிகளாகப் பசுமாட்டின் மூத்திரமும், சாணியுமே பயன்படுத்தப் பட்டன. ஆனால் பசுக்கள் படுகொலை ஆரம்பித்ததும், 1910 ஆம் ஆண்டிற்குள்ளாக 350 பசுக்கொலைக்களங்கள் ஏற்படுத்தப் பட்டு இரவு பகலாக அவை வேலை செய்தன. இதன் மூலம் கால்நடைகள் குறைய ஆரம்பித்ததோடு உரங்களின் தேவைக்கு இங்கிலாந்து நாட்டையும் அதன் செயற்கை உரத்தையும் நம்ப ஆரம்பித்தது இந்தியா. பின்னர் சுதந்திரத்துக்குப் பின்னர் செயற்கை உரங்களின் மூலம், "பசுமைப் புரட்சி செய்தது இந்தியா. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் செல்லப் போகிறார்கள் என்பது தெரிந்ததும் "தி கார்டியன்" என்னும் பத்திரிகை காந்தியைப் பேட்டி கண்டது. அப்போது காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும், பசுக்களைக் கொல்லும் இடங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் உறுதி கூறினார். அதற்கு முன்னரே 1929 ஆம் ஆண்டில் நேருஜி ஒரு பொதுக்கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் பிரதமராகத் தான் நியமிக்கப் பட்டால் தான் செய்யப்போகும் முதல் வேலை பசுவதைத் தடுப்பு என்று முழங்கினார். ஆனால் 1947 ஆம் ஆண்டில் இருந்தும் அதன் பின்னரும் பசுக்களைக் கொல்லும் இந்தக் கொலைக்களங்கள்350 இல் இருந்து 36,000 ஆக மாறியதோடு ஆந்திராவிலும் மஹாராஷ்டிராவிலும் ஒரே நேரம் பத்தாயிரம் பசுக்களைக் கொல்லும் தொழில் நுட்பமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதை இங்கே கூறுவதன் நோக்கமே ஆங்கிலப் படிப்பு ஆரம்பித்த பின்னரே வரதக்ஷணைப் பழக்கம் ஏற்பட்டது என்பதைச் சொல்லவே. அதில் ஆரம்பித்தது எங்கேயோ போய்விட்டது. இப்போ நாம் கல்யாணத்தைக் குறித்துப் பார்ப்போம்.

பிரமசாரி ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றொரு கேள்வி எழுந்தது. அதற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமாக அனைவராலும் நடக்க முடியாது என்பது ஒன்றே ஆகும். எல்லாராலும் நைஷ்டிக பிரமசரியம் அனுசரித்துக்கொண்டு ஸமாவர்த்தனமும் பண்ணிக் கொள்ளாமல் குருவிடமே இருந்து அவருக்குச் சேவை செய்து கொண்டு, சந்நியாச வாழ்க்கை வாழ இயலாது. ஆகவே தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றொரு பொதுவான தர்மத்தை ஏற்படுத்தி உள்ளனர். நல்ல மனோதிடம் உள்ளவர்கள் சந்நியாசியாகவும் ஆகலாம். ஆனால் இளமையில் சந்நியாசியாக ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் அதற்கு விரோதமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே ஸமாவர்த்தனம் என்பது முடிந்த பின்னர் மாணவன் குருவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு காசிக்கு யாத்திரை சென்று வந்து பின்னர் திருமணத்துக்கு ஆயத்தம் ஆக வேண்டும். திருமணம் வரையில் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது அவனுக்கு ஸ்நாதகன் எனப் பெயர். ஸமாவர்த்தனம் என்பது இப்போதைய பட்டமளிப்பு விழா போல் ஆகும். குருகுல வாசமும் பனிரண்டு வருடங்கள் ஏற்றாக வேண்டும். அதற்கு முன்னரே உபநயனமும் முடிய வேண்டும். மனதில் விகல்பமான எண்ணங்கள் உள் புகுமுன்னர் கல்வி உள்ளே சென்று மாணவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஏழில் இருந்து பனிரண்டு வயதுக்குள்ளாக உபநயனம் செய்வித்து குருவிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த உபநயனமும் அனைவருக்கும் பொதுவானது. மற்ற வர்ணத்தவர் பனிரண்டு வயதுக்கும், பதினாறு வயதுக்கும் உபநயனம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறது. பிரமசாரியாகவே இருந்தால் சிருஷ்டியின் நோக்கம் தடைப்படும். எல்லாரும் சந்நியாசியானால் அந்த சந்நியாசிகளுக்கு உணவளிப்பது யார்? அதற்காகவேனும் கிரஹஸ்தர்கள் வேணுமே. ஆகவே இந்தப் பிரபஞ்சம் சரியானபடி நடைபெறவும், ஜீவர்கள் தங்கள் கர்மாவைக் கழிக்க வேண்டிப் பிறப்பெடுக்கவும், திருமணங்கள் தேவையாகின்றன. ஆனால் வெறும் குழந்தை பெற்றுக் கொள்வதும், மனைவியோடு இன்பம் துய்க்கவும் மட்டுமே திருமணம் என்று ஏற்படவில்லை. அவரவர் தங்களுக்கு விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும். அதற்கு மனைவியின் துணையும் கட்டாயம் தேவை.

ஆதாரம்: தெய்வத்தின் குரல்.

இன்னும் அலசுவோம்.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants