PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

படைப்புக்குத் தேவை பெண்ணினமே. புழு, பூச்சியில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் பெண் இனம் ஆண் இனத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அனைத்துப் படைப்புகளும் பெண்ணினத்தில் இருந்தே வருகின்றன என்பதையும் அறிவோம். இப்படி இயற்கையே பெண்ணைப் படைக்கவும், ஆணை அதற்குத் தேவையான விதையைத் தரவும் எனப் படைத்து இருக்கிறபோது ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? பெண்ணுக்கே சுபாவமாகவே துன்பங்களை ஜீரணித்து எதிர்த்து நிற்கும் வல்லமை உண்டு. மநுநீதியில் கூட இதைக் குறித்துக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாய்ப் பரமாசாரியார் சொல்கிறார். க்டும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு. ஆகவே பிரமசாரியானவது அடுத்த நிலைக்குச் செல்லவேண்டித் திருமணம் செய்து கொள்கிறான். இதற்காகப் பல வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து ஒரு காலத்தில் தனக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்கின்றனர்.

திருமணம் செய்து கொள்ளும் முன்னர் பெண்ணின் குலம், கோத்திரம் போன்றவை விசாரிக்கப் படும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது தடுக்கப் படுகிறது. உறவின் முறை திருமணமும் தடுக்கப்பட்டே இருக்கிறது. எந்த சாஸ்திரமும் உறவின் முறைத் திருமணத்தை ஆதரிக்கவே இல்லை. எல்லா கோத்திரக்காரர்களும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதோடு ஒரே கோத்திரமாக இருந்துவிட்டால் காலப்போக்கில் ஆண்-பெண் விகிதங்கள் குறையும்போது அந்த கோத்திரக்காரர்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஒரே கோத்திரம் மறுக்கப்படுகிறது. வெவ்வேறு கோத்திரங்களில் பிறந்தவர்கள் இணைந்தாலே குடும்பம் செழிப்படையும் என்பது தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை ஆகும். மேலும் மன ஒற்றுமைக்கும் வெவ்வேறு கோத்திரத்தையே சிபாரிசு செய்கிறது சாஸ்திரம். அதோடு பெண்ணுக்குப் பதினேழு வயது கட்டாயம் முடிந்திருக்க வேண்டும். ஆணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். இதற்கான காரணமாக ஆயுர்வேதம் கூறுவது என்னவெனில், பெண் பதினாறு வயதில் பூர்ணவதியாக கர்ப்பம் தரிக்க தகுதி வாய்ந்தவளாக ஆகிவிட்ட்டாலும் ஆணுக்கு இருபத்தைந்து வயதில் தான் தந்தை ஆகும் தகுதி ஏற்படுகிறது எனக் கூறுகிறது. பதினாறு வயதுக்குக் கீழே உள்ள பெண்ணுக்கும், இருபதுக்குக் கீழே உள்ள ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாக ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கலாம் அல்லது அற்ப ஆயுளில் இறக்கலாம் எனக் கருதி வந்தனர்.

அதற்கும் முன்னால் பால்யத்திலே திருமணம் செய்விக்கும் வழக்கம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இது குறித்துப் பரமாசாரியார் தெரிவிப்பது என்னவெனில் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வித்த வழக்கம் இருந்தது என்றே கூறுகின்றார். பால்யத்தில் மனதில் கபடு, சூது தெரியா பிள்ளைப் பருவத்தில் காமம் உட்புகும் முன்னர் இருவருக்கும் திருமணம் செய்வது வழக்கமாக இருந்ததை நாமெல்லோரு அறிவோம். எங்க வீட்டில் என் அம்மாவின் அம்மா அப்படித் திருமணம் ஆனவரே. ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது திருமணம் ஆகி இருக்கிறது. என் தாத்தாவுக்குப் பதினேழு வயது. அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆகவே என் பாட்டி வயதுக்கு வரும்வரையில் பிறந்தகத்திலும், புக்ககத்திலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறார். ஐந்து வயது மாட்டுப் பெண்ணை மாமனார் தன் சம்பந்தி வீட்டிற்கு வந்து தங்கள் வீடு இருக்கும் பக்கத்து கிராமத்துக்குத் தூக்கிக் கொண்டு செல்வாராம். வாயில் விரலைப் போட்டுக் கொண்டு மாமனார் தோளிலேயே என் பாட்டி தூங்கி விடுவாராம். ஆனால் இப்படிச் சிறு வயதில் இருந்து பழகியதால் புக்ககத்து மனிதர்களோடு நெருக்கமும், பாசமும் அதிகம் ஆகும் என்பது அவர்கள் கணிப்பு.

இம்மாதிரியான திருமணங்களால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் இயல்பாக நட்பு உருவாகி அது காதலாகவும், பாசமாகவும் மாறி, அவர்கள் வாழ்க்கைக்கு நீடித்ததொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது முன்னோர் கணிப்பு. இப்போதெல்லாம் ஆசையில் தொடங்கினாலும் பின்னர் அது நட்பாகவும் மாறவேண்டும். ஏனெனில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றொரு சொல்லாடல் உண்டு. ஆசை அடங்கினாலும் நட்பு தொடரும்; தொடரவேண்டும். இதுவே கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் காரணம். தாம்பத்திய இன்பம் என்பது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும். கல்யாணத்தின் குறிக்கோள் அது இல்லை. நட்பின் அடிப்படையில் இளமை முதிர்ந்து ஆசாபாசங்கள் இல்லாத எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கையில் நட்பின் அடிப்படையில் ஒன்றிய உள்ளங்கள் கொண்ட தம்பதிகள் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்து போவார்கள் என்பதும் கண்கூடு.

அதோடு முடிந்ததா? அந்தக் காலத்தில் பெண் பார்ப்பது என்றெல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர். பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் இப்போதும் தெலுங்கு பேசும் மக்களின் திருமணத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே திரை கட்டுவது வழக்கம். பெண்ணை அந்தத் திரை திறந்ததுமே பார்ப்பது மணமகன் முதல் முறையாகப் பார்ப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது. வட மாநிலங்களில் இப்போதும் திருமணம் முடிந்த முதலிரவின் போது பெண்ணின் முகத்திரையை மணமகன் அகற்றுவது என்பது ஒரு சாஸ்திரம் சார்ந்த சம்பிரதாயமாகவே பார்க்கப் படுகிறது. அதுவரையிலும் மணமகள் மணமகன் தன்னைப் பார்க்க முடியாமல், "குங்கட்"எனப்படும் முகத்திரை அணிந்தே காணப்படுவாள்.

படம் உதவி: கூகிளார், உஜிலாதேவி ப்ளாக்ஸ்பாட்.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants