PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

இந்துத் திருமணங்களின் பின்னணி

இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர். வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர்.

@அப்பாதுரை, தைவக் கல்யாண முறையோடு இது எழுதப் பட்டிருப்பதால் தைவ கல்யாணங்களில் வரதக்ஷணை இருந்தது என்ற கருத்துத் தோன்றி விட்டது. தவறு என் மேல் தான். நான் சொல்ல வந்தது என்னவெனில் தைவக் கல்யாணங்களில் பெண்ணை வைத்துக் கொண்டு பிள்ளை தேடி வராமல் பிள்ளையைத் தேடிப் போனது போல் தற்காலத்திலும் சில வருடங்கள் முன்னர் வரை பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிப் போய்க் கல்யாணம் ஏற்பாடு செய்தனர் என்பதே. இதுக்குத் தான் வரதக்ஷணை கொடுத்தனர். தைவக் கல்யாணங்களில் இல்லை.

மேலே குறிப்பிட்டவை அப்பாதுரையின் பின்னூட்டத்துக்கு என் பதில். இந்தப் பதிவில் தைவக் கல்யாணங்கள் குறித்த விளக்கத்தில் மேற்கண்ட வரிகளும் சேர்க்கப் பட்டிருப்பதில் தைவக் கல்யாணத்தின் பொருளே மாறுபட்டுத் தொனிக்கிறது. உ.வே.சா. அவர்கள் எழுதிய கல்யாணம் குறித்த சான்றுகள் சுபா மூலம் கிடைத்துவிட்டன. விரைவில் அவற்றைப் பகிர்கிறேன்.

/குழந்தை பிறப்பை மட்டுமே ஒட்டித் திருமணங்கள் நடந்தன என்பதும் என் கருத்து. பிரஜா உற்பத்தி நோக்கம் இல்லாத திருமணங்களே இல்லை. இந்துத் திருமணங்களின் பின்னணியில் சந்ததி விருத்தம் மிக ஆதாரமான இடம் பெற்றிருக்கிறது. குழந்தைப் பிறப்புக் குறிக்கோள் இல்லையென்றால் இரண்டாம் திருமணங்கள் பிள்ளைக்கு நடக்க வேண்டிய அவசியம் கிடையாதே? (அதே மனுநீதி மகவின்மைக்குக் காரணம் பெண் என்பது போல் பேசுகிறது) சந்ததி, அதுவும் ஆண் சந்ததி, இல்லையென்றால் ஸ்ரார்த்தம் செய்ய முடியாதே? தனக்கு மட்டுமல்ல, முகமறியாத முன்னோருக்கும் அல்லவா கழிவுக்கடன் செய்ய வேண்டியிருக்கிறது நமது பொன்னான வேதங்கள் சொன்னபடி? அதற்காகவேனும் குழந்தை பிறப்பு அனுசரிக்கப் படவேண்டுமே?//

அப்பாதுரை, திருமணத்தின் ஒரு நோக்கம் சந்ததி விருத்தி, கோத்திர வளர்ச்சி என்று ஏற்கெனவே நானும் கூறியுள்ளேன். மேற்குறிப்பிட்ட கர்மாக்களைச் செய்ய மனைவியின் துணை வேண்டுமல்லவா? அதுவும் சாமவேதிகள் எனில் மனைவி இறந்தாலோ, அல்லது வீட்டுக்கு விலக்காய் இருந்தாலோ, உடல் நலமில்லாமல் எழுந்து நடமாடச் சக்தியற்று இருந்தாளெனிலோ, கணவன் செய்யும் சிராத்தக் கடமைகளில், ஹோமம் என்ற பெயரே கிடையாது. மனைவி இருந்தால் தான் ஹோமம். அதோடு நீங்கள் கூறுவதும் கிரஹஸ்தனின் நித்ய கர்மானுஷ்டானங்களில் ஒன்றே. ஆகவே திருமணத்தின் ஒரு குறிக்கோளான பிள்ளைப்பேறு என்பதிலும் அர்த்தம் பொதிந்தே இருக்கிறது.

ஸ்ராத்தம் தான் சரியான உச்சரிப்பு, சரியான வார்த்தை. ஸ்ரார்த்தம் என "ர்" போடுவது தவறு. ஸ்ரத்தையாகச் செய்வது தான் ஸ்ராத்தம்.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants