PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலமா?

பெண் பார்த்தல் என்ற சடங்கு அந்த நாட்களில் இல்லை எனினும், அரசர்கள், பெருந்தனக்காரர்கள் சுயம்வரம் போன்ற ஒன்றை வைத்தும் பெண்ணுக்கேற்ற வரனைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம். இப்போப் பெண் பார்த்தாச்சு! பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டாச்சு! பெண்ணின் தலைமயிரைப் பிடித்து இழுத்தாயிற்று. உண்மையான தலைமயிர் தான் என்றும் உறுதியாகத் தெரிந்தாச்சு. பேசவும் பேசுகிறாள். கல்யாணமாகி வந்ததும் பேச்சை நிறுத்துவாளா என்பது வேறு விஷயம். இப்போதைக்குப் பெண் ஊமை இல்லை. நடை, உடை, பாவனை எல்லாம் சரி. பெண்ணைப் பிடித்துவிட்டது. அடுத்து என்ன? நிச்சயம் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் என்னும் சடங்கே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது. ஆனால் அந்த நாட்களில் பென்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் ஊர்ப் பெரியவர்களில் சிலர் முன்னே அவர்கள் சாட்சியாக வெற்றிலை, பாக்குத் தட்டை மாற்றிக் கொள்வார்களாம். இதற்குப் பாக்கு, வெற்றிலை மாத்திக்கறதுனு பெயர். பெரும்பாலும் தஞ்சை ஜில்லாவில் இன்றளவும் பாக்கு, வெற்றிலை மாற்றினதாய்த் தான் சொல்வாங்க. என் கல்யாணமும் என் அப்பாவும், அவரின் நண்பர் ஒருத்தர் மட்டுமே சாட்சியாக இருக்கப் பிள்ளை வீட்டுக்காரங்களோடு பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டே முடிவு செய்யப் பட்டது என்பதை ஏற்கெனவே எழுதி இருக்கேன்.

கல்யாணம் நிச்சயம் ஆனதும், கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம் முடிந்ததும் அல்லது மாலை நல்ல வேளையில் நடப்பதே உண்மையில் நிச்சயதார்த்தம் ஆகும். இதைப் பெரிய நிச்சயதார்த்தம் என்கின்றனர். கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்வதைச் சின்ன நிச்சியதார்த்தம் என்கின்றனர். இது இப்போதெல்லாம் குறைந்த பக்ஷமாகப் பெண்ணின், பிள்ளையின் செளகரியத்தை உத்தேசித்து ஒரு வருடம் முன்னேயே நிச்சயம் செய்து பின்னர் கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது. ஒரு சில கல்யாணங்களே நிச்சயம் முடிந்தவுடனேயோ அல்லது மூன்று மாதத்துக்குள்ளேயோ நடக்கின்றன. திருமணத்தின் ஆரம்பமே நிச்சயதார்த்தம் தான் எப்போவுமே என்பதைத் தெரிந்து கொள்கிறோம். இதைப் பெண்ணின் தகப்பனார் அளிக்கும் வாக்குறுதி என்னலாம்.

தாம்பூலம் நம் வாழ்க்கையில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது. அந்தத் தாம்பூலத்தில் பொருளையோ, பண்டமோ வைக்கிறோமோ இல்லையோ, வெறும் வெற்றிலை, பாக்கு, பழம் என்றாலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது. ஒரு வெத்திலை, பாக்குக்கு வழியில்லை; கல்யாணம் பண்ணினாங்களாம்னு சொல்றவங்களைப் பார்த்திருக்கலாம். வெற்றிலையின் பசுமை நிறம், சுண்ணாம்பின் தூய வெண்மையோடு, பாக்கின் பழுப்பு நிறம் சேர்ந்து சிவப்பாக மாறுகிறது. பசுமையான வெற்றிலையில் வைக்கப் படும் கொட்டைப்பாக்கு, ஆவுடையாரையும் பாணத்தையும் குறிப்பதாகச் சொல்கின்றனர். உமாமகேசுவரருக்கு ப்ரீதி என வெற்றிலையையும், பாக்கையும் கூறுகின்றனர். திருமணத்தை உறுதி செய்ய மட்டும் தாம்பூலம் பயன்படுவதில்லை. திருமணம் ஆனதும் முகூர்த்தத் தாம்பூலம் மிக முக்கியம். அதோடு பலத்த விருந்துச் சாப்பாடு ஜீரணம் ஆகவும் தாம்பூலம் தரிக்கின்றோம். தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை, பாக்கு இல்லாமல் செய்ய மாட்டோம். சுமங்கலிகளுக்கு நாள், கிழமைகளிலும் சும்மா வீட்டுக்கு வந்துட்டுப் போனாலுமே தாம்பூலம் கொடுப்போம்.

சம்பந்திகளுக்கு பதில் மரியாதையில் தாம்பூலம் இடம் பெறு,ம். பெண்ணின் மாமன்மார், அத்தைமார், பையரின் மாமன்மார், அத்தைமார் போன்றோருக்கும் தாம்பூலம் விட்டுப்போகாமல் நினைவாய்க் கொடுக்க வேண்டும். அவ்வளவு ஏன்? திருமணச் சடங்குகளிலேயே பெண் மணமகனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப்பாள். பெண்ணின் சகோதரன் பக்குவமாகச் சுண்ணாம்பு, பாக்கு வைத்த தாம்பூலத்தை மடித்துத் தர அதைப் பெண் வாங்கித் தன் கணவனுக்குக் கொடுப்பாள். இதைப் பின்னால் பார்க்கலாம். ஆனால் இப்படியாகத் தாம்பூலம் என்பது நம் வாழ்க்கையில் இன்றளவும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பெண்ணின் பெற்றோரும், பையரின் பெற்றோரும் மிக மிக முக்கியமான உறவினர், ஊர் மக்கள் முன்னிலையில் இன்னாருடைய பெண்ணை, இன்னாருடைய பையருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துத் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்வதே நிச்சயதார்த்தம். பல சினிமாக்களிலும் பார்த்தாச்சு இல்லையா?

வெற்றிலையின் நுனியில் மஹாலக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி என்னும் வாக்தேவி, காம்பில் ஜ்யேஷ்டா தேவி, இடப்பக்கம் மஹாசக்தி, வலப்பக்கம் பூமி தேவி, உள்ளே மஹாவிஷ்ணு,, வெளியே சந்திரன், ஓரங்களில் ஈசன், பிரம்மா, மேலே இந்திரன், ஆதவன், எல்லாப் பக்கங்களிலும் மன்மதன் என தேவதைகளின் இருப்பிடமாகக் கூறுகின்றனர். இதில் காம்பான ஜ்யேஷ்டாதேவியைக் கிள்ளி எறிந்துவிடுகிறோம். அதோடு தொடர்புடைய நரம்புகளையும் அகற்றிவிட்டே வெற்றிலை தரிக்கிறோம். வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு. சின்னக் குழந்தை வயிற்றுப் பொருமலில் அழுது கொண்டே இருந்தால், வெற்றிலை ஒன்றோடு, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் வைத்து அம்மியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் குடிக்கக் கொடுத்தால் சரியாகும். இது என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டிப் பொறுக்கும் பதத்தில் தொப்புளில் வைத்தாலும் வயிற்று வலி சரியாகும். வெற்றிலையின் மகத்துவம் இன்னும் நிறைய என்றாலும் நாம் பார்க்க வேண்டியது நிச்சயதார்த்தம் இல்லையோ?

சமீப காலங்களில் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் தட்டுத் தட்டாக சீர் வரிசை வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயத்தின் போதே பிள்ளைக்கு, பெண்ணுக்கு நகைகள், ஆபரணங்கள் போடுவதும் வழக்கமாகி இருக்கிறது. இதை வைத்துப் பெண்ணின், பிள்ளையின் அந்தஸ்தையும் நிர்ணயம் செய்து கொள்கின்றனர். முன் காலத்தில் எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வெறும், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ள தட்டு மட்டுமே! :)))) நிச்சயதார்த்தம் முடிச்சாச்சு. அடுத்துக் கல்யாண வேலை நிறைய பாக்கி இருக்கே! சீர் வரிசைகள் பத்திச் சொல்ல வேணுமா? கல்யாணம் பத்தி விளக்கம் கொடுத்தால் மட்டும் போதுமா? கல்யாணம் பத்தி மட்டும் போதும்னு நினைக்கிறேன்.

படம்: சொந்தமோ சொந்தம்!

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants