PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

மாமியாரு, மாமனாரை மதிக்கணும்!

ஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு! இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை!

இந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது. முதிர் கன்னர்கள் கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம் காட்டுவதில்லையாம். "நீங்க ஜாதகம் அனுப்புங்க; நாங்க பார்க்கிறோம்." என்ற அளவிலேயே பேசறாங்களாம். ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின் வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா? அல்லது வாங்கும் வசதி இருக்கா? கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு வேலைக்குப் போவா. உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது. குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும். அப்படிக் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும்."

"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர வேண்டியது. மாசா மாசம் கரெக்டா வந்துடணும். அக்ரிமென்டாகப் போட்டுக் கொண்டாலும் சரி. பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது. செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும். முன் கோபம் ஜாஸ்தி. நீங்க தான் அனுசரிச்சுக்கணும். அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும் செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது. அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம். ஆனால் சமையல் வேலை எல்லாம் எங்களால் பார்த்துக்க முடியாது. நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச் செய்து போடணும்." இது ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஆச்சரியமா இருக்கா? ஆனால் இது உண்மை. ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு நெருங்கிய சொந்தம். ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே அதிகம். வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும் பார்த்துவிட்டேன். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை. சென்னையே எங்களுக்குத் தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க. இதுவும் தெரிஞ்சவங்க தான். உறவு தான். மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க. பிள்ளை வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே தெரிஞ்சவங்க. அவங்க பிள்ளையும் இஞ்சினியர். பெண்ணும் ஐடியில் அல்லது இஞ்சினியராக இருக்கிறார். நல்ல சம்பாத்தியம். பெண்ணுக்கு வேலைக்குப்போக வசதியாக மாம்பலத்தில் வீடு. காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப் போகணும். மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான். சாயந்திரம் வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும். மாமியார் சாயந்திரத்துக்குத் தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க. இன்னிக்கும் அப்படித் தான் நடக்கிறது. அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம் சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை. ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்) தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால், "உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன வேலைக்காரியானு பதில் வருமாம். இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச் சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி முற்றம் நிறைய இருக்கும். பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது?

அந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால் அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில் குழந்தையும் பிறந்தாச்சு. குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக் கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள். ஆகவே அவள் தான் பொறுப்பு. மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு. காலை அந்தப் பெண் வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச் செல்வார். மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை. பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை. நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக. இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம் நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை.

ஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின் நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம். எங்கே போகிறோம்? இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக? இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதற்கா? என்ன நாடு இது? என்ன மனிதர்கள் இவங்க? எப்போ மாறும் இதெல்லாம்? நினைக்க நினைக்கக் கொதிக்கிறது! அந்தப் பெண்ணின் தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார். அக்காவுக்கு வந்தாப்போல் எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ? ஆங்காங்கே ஒரு சில பெண்களும், மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது. என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்; வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

பொதுவாகப் புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விதத்தில் கஷ்டப்படுவதாய்ச் சொல்வதை நானும் பார்த்திருக்கேன். ரொம்பவே படுத்தும் என்பார்கள். பரணி தரணி ஆளும் என்று வழக்கு மொழி இருந்தாலும் பரணியில் பிறந்தவர்களும் கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கேன். கேட்டை நக்ஷத்திரம் கோட்டை ஆளும் என ஒரு தரப்பாரும், (அவங்க வீட்டில் நிறையக் கேட்டை நக்ஷத்திரக்காரங்க இருப்பாங்க) கேட்டை கோட்டையை அழிக்கும் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். மகத்துப் பெண் ஜகத்திலேயே கிடையாது என்பாரும் உண்டு. பெண்ணுக்கு மகம் என்றால் எங்க பிள்ளைக்கு வேண்டாம் என்பவர்களும் உண்டு.

பொதுவாகக் கல்யாணத்திலே நக்ஷத்திரப் பொருத்தம் தான் முக்கியம். புனர்பூசம் யாருக்கு இருந்தாலும் அந்த நக்ஷத்திரத்திற்குரிய பெண்ணையோ, பிள்ளையையோ சேர்த்தால் அதற்கேற்றாற்போல் கல்யாண முஹூர்த்தம் அமைந்துவிட்டால் பிரச்னை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. மற்றபடி நக்ஷத்திரத்தைக் காரணம் காட்டி ஜாதகத்தை மறுப்பதோ, அல்லது எல்லாம் பொருந்தி வரும் இடத்தை மறுப்பதோ சரியல்ல என்பது என் கருத்து.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants