PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

ஜாதகம் பார்த்தல்

சமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார். ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார். ஆஸ்பத்திரியில் ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ் ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உண்மை ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன் வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம். ஒருத்தரின் தோஷங்களை அந்த ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து, இந்த கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல் மருந்து கொடுப்பார்கள். அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

விளையாட்டு இல்லை; இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன். சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின் ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். மற்ற எந்தப் பொருத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. ஆகவே திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில் ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது? அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல் பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது. பெண்ணிற்கு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம். அந்த நாட்களில் செயற்கை ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் தானோ என்னமோ பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

பெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம். இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண் ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளுக்கு மாதாந்திரப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்திருக்கிறாள். மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல். அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர் கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண். இப்போதைய பணி நேர மாற்றங்கள், பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல் வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஆகவே பெண்களின் உடல் நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

இப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை. கூடவே Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டிலேயே என் பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என் மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants