PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

ஜோசியம் பொய்யல்ல

ஜோசியம் பொய்யல்ல. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் பெயர் வந்த காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்பதாலேயே. இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு, மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம், எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர். அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும். ஏனெனில் சந்திரனின் ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப் படித்திருக்கோம் இல்லையா? அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்கின்றனர். சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.

ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே. இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே. நம் மூலமே நம்முடன் வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும் பரவியுள்ளது எனலாம். இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர், இடைக்காடர் போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர். அகத்திய நாடி மிகவும் சிறப்பானது. ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால் பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவார்கள் என எண்ணுகிறேன். ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர். இந்தியாவில் ஒரு சில பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும்(இப்போ இருக்கா?) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக இருந்தது/இருக்கிறது.

AstrologyProgramme

காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.

ஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது. கல்வி கற்றுக் கொடுப்பதும், மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் பார்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும் தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு. இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன. வான சாஸ்திரம் குறித்த விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் கோள்களின் சுழற்சியைத் துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில் பார்க்கலாம். இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக் குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப் படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல. உண்மையான ஜோதிடர்கள் இன்றும் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். ஜோதிடத்தைப் பாடமாக வைக்க வேண்டும். கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள். என்னைப் பொறுத்த வரையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை. அதே போல் ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன். இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும் நடக்கிறதைப் பார்க்கிறேன். ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை. அப்பாதுரை சொல்லி இருப்பது போல் தானாக வந்த தகவல்களே.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants