PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

ராமா கல்யாணமே வைபோகமே! சீதா கல்யாணமே வைபோகமே!

காமிராவை வெர்டிகலா வைச்சு எடுங்கனு வெங்கட் (நாகராஜ்) சொன்னதாலே அப்படி எடுத்தப்போக் கூட ராமரோட ஒரு பக்கத்திலே இருக்கும் விக்ரஹமும், கீழேயும் ஒரு பக்கத்து விக்ரஹங்கள் மட்டுமே வருது. இன்னும் கொஞ்சம் பின்னால் போகணும் ஹவுடினி மாதிரி! :)))))))

பின்னாலே எங்கே போறது? மூணடி?? மூன்றரை அடி பாசேஜ்! பின்னால் சுவர் தான். :)))) சுவத்தை ஊடுருவிக் கொண்டு ஹவுடினி மாதிரிப் போக முடியலை. போனால் போகட்டும். இப்போ,

கல்யாணம் நிச்சயம் செய்தப்புறமா செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடலாமா?

முதல்லே பத்திரிகை அடிக்கக் கொடுக்கணும்

தொலைதூரத்தில் இருக்கும் உறவினர், நண்பர்கள் விலாசங்கள் சேகரிக்கணும்.

அடுத்துப் பத்திரிகைகள் வந்ததும், கிட்ட இருக்கிறவங்களுக்குக் கல்யாணத்துக்குப் பதினைந்து நாட்கள் முன்னாடி கொடுக்கிறாப்போலும், தூரத்தில் இருக்கிறவங்களுக்கு, முதலில் ஒரு போஸ்ட் கார்ட், இப்போல்லாம் தொலைபேசி மூலம் தெரிவித்து, அவங்க வரவை உறுதி செய்து கொள்வது நல்லது. ரயிலிலோ, விமானத்திலோ, பேருந்திலோ வரவங்க அவங்க பயணச்சீட்டை உறுதி செய்துக்க வசதி. அப்புறமாப் பத்திரிகையை கையால் எழுதிய ஒரு அழைப்புக் கடிதத்தோடு அனுப்பி வைக்கணும். அதுக்கும் இப்போல்லாம் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கையெழுத்து மட்டும் போடறாங்க சிலர் அதுவும் போடறதில்லை.

பத்திரிகைகளில் விலாசம் எழுதி, ஸ்டாம்ப் மறக்காமல் ஒட்டி அனுப்ப என்றெ இரண்டு பேரைத் தனியா நியமிக்கணும்.

அடுத்துத் துணிமணிகள். முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும். ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க. அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும். ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்) கல்யாணப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.

அடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம். காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர். ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)

இதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை. இங்கே நல்லா வெயில் காயுது! யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க? அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும். அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்! இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.

மரபு விக்கியிலிருந்து நன்றியுடன்

கெளரி கல்யாண வைபோகமே       கல்யாணச் சேலை உனதாகும் நாளை!


Designed and maintained by AKR Consultants