PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

டோலி சஜாகே ரக்னா!

கல்யாணப் பெண்ணுக்கு உடைகள் வாங்குகையில், திருமணம் ஆகிச் செல்லும் பெண் குறைந்தது ஆறு மாதத்துக்காவது புகுந்த வீட்டில் இருந்து எதையும் கேட்டு வாங்கும் வண்ணம் விட மாட்டார்கள். ஆறு மாதத்துக்கான உடைகளோடு, மற்ற அத்தியாவசியப்பொருட்களையும், வாங்கிக் கொடுப்பார்கள். இதில்பவுடர், சோப்பு, சீப்பு, குங்குமம், மற்ற அழகு சாதனப்பொருட்கள் போன்றவையும் அடங்கும். எல்லாத்துக்கும் முதல்லே துணி எடுக்கக் கடைக்குப் போனதும் முதலில் வாங்க வேண்டியது பிள்ளையார் வேஷ்டி. அப்புறமா அவங்க அவங்க குல தெய்வத்துக்குச் சாத்த வேண்டிய துணிகளை வாங்கி விட்டுப் பின்னரே மணப்பெண்ணுக்கும், மற்றவர்களுக்கான துணிமணிகளும் வாங்க வேண்டும். அதே போல் பாத்திரங்கள். திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் போகும் பெண்ணாக இருந்தால் அதற்கேற்றாற்போல் பாத்திரங்கள் வாங்கிவிடலாம். ஒரு சிலர் பின்னர் தனிக்குடித்தனம் போவார்கள். அப்போத் தனியாகச் செய்ய வேண்டும் என சில பிள்ளை வீட்டினர் கேட்பார்கள். அப்படியான இடமாக இருந்தால் கல்யாணத்துக்கு வைக்கும் பாத்திரங்களிலேயே சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் கொடுக்கலாம். அதோடு புகுந்த வீட்டுப் பழக்கங்கள், பூஜை முறைகள் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரியான சில பாத்திரங்களும் வாங்கும்படி இருக்கும்.

உதாரணமாகப் பூஜை சாமான்கள் மணி, சூடத்தட்டு, தீபக்கால், தூபக்கால் போன்றவையும் வாங்குவார்கள். சமையல் பாத்திரங்கள் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவார்கள். இப்போது எல்லாம் மிக்சி, கிரைன்டர் போன்றவை, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. வெளிநாட்டில் அவரவர் சக்திக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்கவென கிஃப்ட் வவுச்சராகக் கொடுப்பார்கள். திருமணம் ஆன தம்பதியர் அந்த வவுச்சரின் தொகைக்கேற்பத் தாங்கள் வாங்க வேண்டிய தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். நம் நாட்டிலும் இம்முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. இதனால் பெண் வீட்டினருக்குப் பெருமளவில் சுமை குறையும். மஹாராஷ்டிரா திருமணங்களிலும், குஜராத்தியர் திருமணங்களிலும் திருமணத்துக்கு நாம் கொடுப்பது பரிசோ பணமோ பொதுவிலே தான் கொடுக்க வேண்டும். பெண் வீட்டினருக்குத் தனியாக, பிள்ளை வீட்டினர் தனியாக என வாங்கும் வழக்கம் அங்கில்லை. இது தெரியாமல் ஒரு முறை குஜராத்தியர் திருமணத்தில் நீங்க பெண் வீட்டினரா, பிள்ளை வீட்டினரா எனக் கேட்க, அவர்கள் சிரித்ததோடு அல்லாமல்,

"இந்தப் பணம், பரிசு எல்லாம் பிள்ளை, பெண் இருவரையும் சார்ந்தது. நாங்க மொத்தமாய் வாங்கி அவர்களிடம் கொடுத்துடுவோம். ஒரு பைசா கூடப் பெண்ணின் அம்மா, அப்பாவுக்கோ, பிள்ளையின் அப்பா, அம்மாவுக்கோ போகாது. திருமணத் தம்பதிகளிடம் அப்படியே ஒப்படைப்போம். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், குடும்பம் நடத்தவும் இந்தப் பணம் பயன்படும். "அப்படினு சொன்னார்கள். ஆச்சரியமாவே இருந்தது. அதோடு வாங்கிக் கொடுப்பவர்களும் ஒருத்தருக்கொருத்தர் கலந்து பேசிக் கொண்டு எந்தப் பொருளும் இரண்டாம் முறையாக டூப்ளிகேட் இல்லாமல் வாங்கியும் கொடுக்கின்றனர். அல்லது பணமாய்க் கொடுத்து விடுகின்றனர். மஹாராஷ்டிராவில் திருமணத்துக்குப் பெண் வீட்டில் ஐம்பது பேர் என்றால் ஐம்பது பேர் தான். அதே போல் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர் தான் வரலாம். மொத்தம் நூறு பேர்தான் அழைப்பே கொடுப்பாங்க. அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கணுமோ அதை முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்றாற்போல் அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுப்பார்கள். சமையல், சாப்பாடு எல்லாமும் அதற்கேற்றாற்போல் கச்சிதமாகவே இருக்கும். ஒரு நபர் கூட வந்தாலும் சரி, முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதோடு யார் தரப்பில் வருகிறாரோ அவர்கள் செலவுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இப்போல்லாம் மாறி இருக்கிறதாவும் கேள்விப் படுகிறேன். எல்லாரையும் பார்த்துட்டு அவங்களும் ஆடம்பரத் திருமணத்துக்கு மாறி இருக்கலாம். ஆனால் இங்கே குடியேறிய மராட்டியர்கள் திருமணம் முன்னெல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்ததாகவும், இப்போது மூன்று நாள் திருமணமாக ஆகி இருப்பதாகவும் கூறுகின்றனர். அதோடு மூன்று முறை தாலி கட்டுவார்கள் எனவும் சொல்கின்றனர். முதல் நாள் ஒரு கருகமணி வைத்த தாலி, பின்னர் இரண்டாம் நாள் இரண்டாம் தாலி மஞ்சள் கயிற்றில். இந்தத் தாலியைப் பிள்ளைக்குப் பெண்ணும் கட்டுவாராம். பெண்ணுக்குப் பிள்ளையும் கட்டுவாராம். இருவருமே ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வார்கள் என்கின்றனர். மூன்றாம் நாள் மீண்டும் இன்னொரு கருகமணி வைத்த தாலி பிள்ளை கட்டுவாராம். அப்போது பிள்ளையின் அம்மா பார்க்கக் கூடாது என்றொரு சம்பிரதாயம் இருப்பதாகவும், தாலி கட்டி முடிந்ததும், பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மாவைப் போய்த் திருமணப் பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து மணமக்களை அவங்க மடியிலே உட்கார வைத்து, வேடிக்கை, விளையாட்டுனு நடக்கும் எனவும் சொல்கின்றனர். இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்டாளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர். அநேகமாய் இது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கானதாகவும் இருக்கலாம். இது ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்தது.

ஆனால் பல வட இந்தியத் திருமணங்களில் பிள்ளையின் அம்மா சொந்தப் பிள்ளையின் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள் சொல்வது ஸ்ரீராமனின் திருமணத்திலும், அவர் தம்பியர் திருமணத்திலும் கோசலை, சுமித்ரை, கைகேயி மூவரும் கலந்து கொள்ளாததால் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என்கின்றனர். பெண்ணைத் திருமணம் ஆனதுமே பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். முன்பெல்லாம் பல்லக்குகளில் அனுப்பி வைத்திருக்கின்றனர். இப்போதெல்லாம் விளம்பரங்களில் பார்ப்பதோடு சரி. :))))

படங்கள் உதவி: கூகிளார்

கல்யாணச் சேலை உனதாகும் நாளை!       நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்!


Designed and maintained by AKR Consultants