PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  


என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

சத்திரம் பார்த்து ஏற்பாடு பண்ணியாச்சு அல்லது வீட்டில்கல்யாணம் நடத்த ஏற்பாடு பண்ணியாச்சு. முக்கியமாய் நினைவு கூர வேண்டிய ஒரு விஷயம் கல்யாணம் நிச்சயம் ஆனதும் குறைந்தது மூன்று மாதங்களுக்குள்ளாகக் கல்யாணத்தை நடத்திடணும். தள்ளிப் போடக் கூடாது. தள்ளிப்போடுவதால் பிரச்னைகள் வரலாம். திருமணமே நிற்கும் அளவுக்குப் போகலாம். அதோடு பெண்ணும், பிள்ளையும் கல்யாணம் தான் நிச்சயம் ஆயாச்சே என அடிக்கடி சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். இதனாலும் பல பிரச்னைகள் வருகின்றன என்பதோடு திருமணங்கள் நின்றே போயிருக்கின்றன. உறவினர் ஒருத்தர் பிள்ளைக்குத் திருமணம் நிச்சயம் செய்தார்கள். நிச்சயதார்த்தத்துக்கே ஐந்து லக்ஷம் செலவு. பின்னே?? ஒரே பிள்ளை! பிள்ளை கொஞ்சம் சாதாரணமான இந்தக் காலத்தில் பிற்போக்கும் என்னும்படியான பழக்கங்களோடு இருந்திருக்கிறார். இத்தனைக்கும் ஐடியில் தான் வேலை. அதோடு திருமணம் நிச்சயித்த பெண்ணோடு அடிக்கடி பேசவும் முயற்சிக்கவில்லை. இதைக் கண்டு அந்தப் பெண் தானே தொலைபேசியில் பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருக்கிறாள். தனியே சந்திக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறாள். திருமணம் நிச்சயம் தான் ஆகிவிட்டதே, பின்னர் என்ன தடை என்பது மாதிரியும் கேட்டிருக்கிறாள்.

அந்தப் பிள்ளை சாதாரணமாகவே, "திருமணத்துக்கு முன்னரே சந்தித்துப் பேசிக் கொண்டால் கல்யாணம் ஆனதும் என்ன புதுசா இருக்கும்?? உன்னை நானும், என்னை நீயும் அப்போத் தான் நல்லாத் தெரிஞ்சுக்க முடியும். இப்போப் பேசுவது என்ன இருந்தாலும் ஒரு ஜாக்கிரதை உணர்வோடு தான் பேசுவோம். மனம் விட்டுப் பேசத் தாலிகட்டினால் தான் முடியும். ஆகையால் நான் வரலை." என்று சொல்ல பிள்ளை முற்போக்காக இல்லைனு சொல்லிப் பெண் வீட்டில் நிச்சயித்த திருமணத்தையே நிறுத்திவிட்டார்கள். அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து பிள்ளையின் அப்பா இறந்துவிட்டார். ஆகவே பெண் பார்க்கையிலேயே இந்தப் பெண் தான் என்பது நிச்சயமாய்த் தெரிந்துவிட்டால், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை அப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள். பெற்றோர் சம்மதத்தோடு பேசுவது நல்லது. பேசுவதையானும் ஒத்துக்கொள்ளலாம். வெளியே சேர்ந்து செல்வதைத் தவிர்க்கவே வேண்டும். நிச்சயம் ஆன பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து வண்டியில் வெளியே போய் விபத்துக்கள் நேரிட்டு அதனாலும் திருமணங்கள் நின்றது உண்டு.

திருமணம் நிச்சயமாகி ஆறு மாசம் கழிச்சுத் திருமணம் நடக்கையில் அந்தப் பெண்ணும், பிள்ளையும் அதிகம் பழகிக் கடைசியில் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் போய் நின்ற திருமணங்களும் உண்டு. வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாக ரத்துக்குப்போனவர்களும் உண்டு. இதை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னொரு இடத்தில் பெண்ணும், பிள்ளையும் பார்த்துக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகளை ஆரம்பிச்சாச்சு. சத்திரம் கூட முடிவு செய்து விட்டார்கள். ஒரு நாள் தொலைபேசியில் பேசும்போது பையன், பெண்ணிடம், கொஞ்சம் மாடர்னாக டிரஸ் செய்துக்கோ; எனக்கு அதான் பிடிக்கும். இன்னமும் கர்நாடகமாய் இருக்கியே! நீ இருக்கும் மல்டிநேஷனல் கம்பெனியில் மற்றப் பெண்களெல்லாம் எப்படி இருக்காங்கனு சொன்னானாம். அது பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. முக்கியமாய்க் கல்யாணத்துக்கு முன்னரே இப்படி அலங்கரிச்சுக்கோ; அப்படி நடந்துக்கோனு சொன்னால் கல்யாணத்துக்கு அப்புறமா அடிமை வாழ்க்கை தான்னு அந்தப் பெண் பெற்றோரிடம் முறையிடப் பெண்ணின் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்கள். கல்யாணமும் நின்னு போயாச்சு. ஆகவே அந்தக் காலங்களில் பெண்ணும், பிள்ளையும் சந்திக்க வேண்டாம் என்று சொன்னதிலும் அர்த்தமில்லாமல் போகவில்லை. இவை எல்லாம் இந்தக் காலத்து ஏற்றதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துக்கு ஏற்ற முக்கியமான ஒன்று என்னவெனில் பெண்ணும், பிள்ளையும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்து குடும்பம் நடத்த வீட்டுப் பெரியவர்களின் அனுபவ வார்த்தைகளையும் இயன்றால் மருத்துவக் கவுன்சலிங்கும் பெறலாம்.

பத்திரிகைகள் கொடுக்கக் கல்யாணப் பெண்ணே நேரில் செல்வது இப்போது வழக்கமாகி இருக்கிறது. சில இடங்களில் பெண்ணும், பிள்ளையும் சேர்ந்தே செல்கின்றனர். தன் தந்தையோடு கல்யாணப் பத்திரிகை கொடுக்கச் சென்ற பெண், விபத்து நேரிட்டு, நல்லவேளையா அந்தப் பெண்ணுக்கு ஒண்ணும் ஆகலை; தந்தைக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து.... இத்யாதி....இத்யாதி! பெண் வீட்டிற்குப் பிள்ளை வீட்டிலும், பிள்ளை வீட்டிற்குப் பெண் வீட்டிலும் கல்யாணம் சொல்வது என்னும் வழக்கத்தை அநுசரித்து அவரவர் அச்சிட்ட பத்திரிகைகளை அவரவர் உறவினருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு செல்வது உண்டு. இது பொதுவான வழக்கம். எல்லாரும் கடைப்பிடிப்பது. பெண்ணின் பெற்றோர் ஒரு நாள் வந்தால், பையரின் பெற்றோர் ஒரு நாள் செல்வார்கள். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம், சர்க்கரை, கல்கண்டு இத்யாதி சாமான்களோடுபோய்ப் பத்திரிகைகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

இப்போ அடுத்து நாமப் பெண்ணும், பிள்ளையும் செய்துக்க வேண்டிய முக்கியமானவைகளைப் பார்ப்போமா? டிடி, பக்ஷணங்களுக்குக் கொஞ்சம் காத்திருக்கத் தான் வேணும். :)))) எல்லாத்தையும் விட முக்கியம் அழகு செய்து கொள்வது. இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லரில் போய்த் தான் அலங்காரம் செய்துக்கறாங்க. அல்லது ப்யூட்டிஷியன் சத்திரம்//வீடுகளுக்கே வராங்க. திருமணம் நிச்சயம் ஆனதுமே ப்யூட்டி பார்லருக்குப் போகும் பெண்கள் அங்கே பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் நல்ல தரமானவை தானானு பார்த்துக்கணும். அல்லது சொந்தமான அழகு சாதனப்பொருட்களைக் கொண்டுபோயிடணும்.

அங்கே எல்லார் முகத்திலும், உடலிலும் போட்டதை நமக்கும் போடுகையில் பலருக்கும் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி அரிப்பு, தடிப்பு, வீக்கம் என்றெல்லாம் வருகிறது. கூடியவரை இயற்கையான முறையில் அழகு செய்து கொள்ளலாம் என்றாலும் இன்றைய நாட்களில் எவரும் அதை ஒப்புக் கொள்ளப்போவதில்லை. ஆகவே கூடியவரை அழகுசாதனப்பொருட்களாவது சொந்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கில் ப்யூட்டி பார்லருக்குக் கொடுக்கையில் ஒரு ஆயிரம் செலவு செய்து சொந்தமாக அழகுப் பொருட்கள் வாங்குவதில் தவறே இல்லை. நம் தோல் பாதிப்படையாமல் இருக்கும்.

எத்தனையோ பெண்களுக்கு இந்த அழகு சாதனப்பொருட்களாலும் ப்யூட்டி பார்லருக்குப் போனதினாலும் கல்யாண சமயத்தில் முகமே வீணாகிப் போயிருக்கிறது. விசாரித்தால் ஒரு புராணமே வெளிவரும். :(

இப்போதெல்லாம் கல்யாணப் பிள்ளைக்கும் ப்யூட்டி பார்லர் அலங்காரம் உண்டு என்பதால் இந்த விஷயத்தில் அவரும் கவனமாகவே இருக்க வேண்டும்.

நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்!       நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!


Designed and maintained by AKR Consultants