PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்! //தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ. அல்லது வேறு வேறு பழக்க வழக்கங்கள் உறவு நாடிச் சென்றாலோ கன்ஃப்யூஷன் ஏற்படாதா. ? எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும். இது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அல்ல. மற்ற நடைமுறைகளுக்காக என்று கொள்ளும்போது யார்காம்ப்ரமைஸ் செய்வது.? எனக்கும் இது எல்லாம் தேவையா என்று கேள்வி உண்டு.//

ஜிஎம்பி சார் கேட்டிருக்கும் கேள்வி இது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திலே திருமணம் செய்து கொண்டாலே குழப்பம் ஏற்படுமே என்று சந்தேகம் கொள்கிறார். முன்னெல்லாம் அருகிலுள்ள கிராமங்களிலேயே சம்பந்தம் செய்து கொள்வார்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் மிக அபூர்வமாக வேறு மாவட்டங்களிலும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. என்னோட பெரியம்மா (அம்மாவின் அக்கா) தஞ்சை ஜில்லாக்காரர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதற்கும் முன்னரே திருநெல்வேலிக்காரர்கள் பெண்ணை என்னோட பெரியப்பா ஒருத்தர் (அப்பாவின் அண்ணா) திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதிலே எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும் என்பதற்கான கேள்வியே எழாது. பெண் எந்த ஊர்க்காரர்களின் மருமகளாகப் போகின்றாளோ அந்த ஊரின் , அந்த வீட்டின் வழக்கங்களும், நடைமுறைகளுமே அவள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும்; கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம். தப்பில்லை. ஆனால் முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம் போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அது தான் முறை. நான் பிறந்தது, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரை. திருமணம் ஆகிப் போனதோ பழைய தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் அருகிலுள்ள கிராமம். பட்டிக்காடு என்றால் பட்டிக்காடு. மின்சாரமே வரலை அப்போது. கை விளக்குகள் தான். விறகு அடுப்பு தான். அதுவும் தென்னை ஓலை, மட்டைகளைப் போட்டு எரிப்பார்கள். ஏனெனில் அது தான் சுலபமாகக் கிடைக்கும். விறகுகள் இருந்தாலும் அதிகம் தென்னை மட்டைகள் தான். இதுதான் இப்படி என்றால் பேச்சிலும் நிறையவே மாறுதல். பள்ளிக்கூடத்தை, "பள்டம்" என்று சொல்வார்கள். கற்றுக்கொள்கிறேன், என்பதை, "கத்திக்கறேன்" என்பார்கள். இதெல்லாம் என்னனு புரியவே எனக்கு ஆறு மாசமாச்சு. ஆனால் இதெல்லாத்தையும் விடப் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதுக்காகவெல்லாம் பயந்தால் முடியுமா?

முக்கியமான சமயங்களில் புக்ககத்துப் பழக்கத்தையே கடைப்பிடிப்பேன். கடைப்பிடிக்கிறேன். இப்போது எனக்குப் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டு பக்கத்துப் பழக்கமும் நன்றாகவே தெரியும். ஆனால் இரண்டுக்கும் எக்கச்சக்கமாக வித்தியாசம். இதுக்காக யார் சமரசம் பண்ணிக்கிறது என்ற போட்டியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. முக்கியமான நேரங்களில் புக்ககத்து வழக்கப்படி செய்துவிட்டால் அப்புறம் நான் இருக்கிறபடியே இருக்கலாம் என்பதே என் கருத்து. குல தெய்வ ஆராதனை, சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவற்றில் என் பிறந்த வீட்டு வழக்கத்தைக் கொண்டுவர மாட்டேன். இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் என்றெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் காலமாகி விட்டது. உலகம் மிகக் குறுகி வருகிறது. கொஞ்சம் ஈகோவைக் கைவிட்டால் போதும். எல்லாம் நம் வசமே.

மற்றபடி சுமங்கலிப் பிரார்த்தனை தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை. எத்தனையோ தலைவர்களின் நினைவு நாட்கள், மதத் தலைவர்கள் நினைவு தினங்கள், அரசியல்வாதிகளின் நினைவு தினங்கள், சினிமா நக்ஷத்திரங்களின் நினைவு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுதும். அப்படி இருக்கையில் நம் குடும்பத்தில் பிறந்து மறைந்த அல்லது நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு கூர்தல் எந்த விதத்திலும் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம். நமக்கு இஷ்டமில்லை எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக் கொடுக்கலாம். துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள்.

சம்மந்தமும் சம்பர்தாயமும்       திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, அலர்மேல் மங்கை மகிழும் மணாளா!


Designed and maintained by AKR Consultants