PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ!

அடுத்துப் பெண்ணிற்குச் செய்ய வேண்டியவற்றைப் பார்க்கலாம். பெண்ணிற்கு ஏற்கெனவே ஜாதக கர்மா முதலியன நடந்திருந்தாலும் கல்யாணத்திற்கு முதல்நாள் திரும்பவும் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. எனக்கெல்லாம் நடக்கவில்லை. ஆகையால் செய்யாததற்குப் பிராயச் சித்தம் செய்வார்கள். தன் பின்னர் புண்யாஹவசனம் செய்வார் பெண்ணின் தந்தை. புண்யாஹவசனம் செய்த ஜலத்தினால் பெண்ணிற்குப்ப்ரோக்ஷணம் செய்து அவளை நேருக்கு நேர் பார்த்து உச்சி முகர்ந்து, (சின்ன வயசில் செய்யலையோ?) வலது காதில் அவளுடைய பெயரைச் சொல்லச் சொல்லுவார்கள். பெண்ணிற்குத் தொட்டில் போடுகையில் என்ன பெயர் வைத்தார்களோ அந்தப் பெயரைத் தான் சொல்ல வேண்டும். ஒரு சிலர் தொட்டிலின் போது வைத்த பெயரால் கூப்பிடுவதில்லை. கூப்பிடத் தனிப் பெயர் இருக்கும். இப்போது என் தொட்டில் பெயர் சீதாலக்ஷ்மி. கூப்பிடுவது தான் கீதா. ஆகையால் திருமணப் பத்திரிகையிலும், கல்யாணத்தின்போது ஜாதககர்மா செய்யும் போதும் சீதாலக்ஷ்மி என்ற பெயரே சொல்லுவார்கள். அப்புறமா அன்னப்ராசனம். ஹிஹிஹி, எட்டு மாசத்தில் செய்ய வேண்டியது. அந்தக் காலத்திலே எல்லாம் பெண்கள் குழந்தைகளா இருக்கிறச்சே கல்யாணம் நடந்திருக்கு. இப்போ வயது வந்த பின்னர் நடக்கும் கல்யாணங்களிலும் இதைப் பார்க்கையில் கொஞ்சம் வேடிக்கையாத் தான் இருக்கும். தயிரும், நெய்யும் கலந்து அன்னப்ப்ராசனம் செய்வித்துப் பின்னர் நெல்லில் பெயரை எழுத வேண்டும். இது அத்தனையும் பெண்ணின் அப்பா செய்வார்.

அடுத்தது பெண்ணிற்கு முக்கியமானது கங்கணதாரணம். பிள்ளைக்கும் உண்டு என்றாலும் பெண்ணின் கங்கண தாரணத்தை முக்கியமாகச் சொல்லுவார்கள். திருமணம் நிச்சயம் ஆனதுமே சங்கல்பம் செய்து கொண்டு கங்கணம் என்னும் ரக்ஷை கட்டிக் கொள்வார்கள். இது கட்டிக் கொண்டுவிட்டால் பின்னர் ஆறு தாண்டி, கடல்தாண்டி, வெளியே செல்லக் கூடாது. அதனாலோ என்னமோ தெரியலை கல்யாணத்திற்கு முதல்நாள் தான் இப்போல்லாம் கங்கணதாரணம் நடைபெறுகிறது. பிராமணருக்குக் கல்யாணத்திற்கு முதல்நாள் எனில் மற்ற சமூகத்தினருக்குக் கல்யாணத்தன்றே நடக்கிறது. இது கல்யாணப் பெண், பிள்ளை இருவருக்கும் உண்டு. துர்தேவதைகள் அண்டாத வண்ணமும், ஆஸெஸம் எனப்படும் தீட்டு முதலியவை அவர்களைப் பாதிக்காது என்றும் இந்த ரக்ஷை பாதுகாப்பதாகச் சொல்லுவார்கள். ரக்ஷை கட்டிக் கொண்டதும் வீட்டை விட்டே வெளியே செல்லத் தடையும் விதிப்பார்கள். ஆனால் இந்தக் காலங்களில் அன்று மாலை தான் ரிசப்ஷனுக்காகப் பெண் ப்யூட்டி பார்லர் போகும்படி ஆகிறது. மிகச் சிலரே கல்யாணச் சத்திரத்துக்கு ப்யூட்டி பார்லரில் இருந்து ஆட்களை வரவழைக்கின்றனர். பெண்ணுக்கு இடக்கையிலும், ஆணுக்கு வலக்கையிலும் இந்த ரக்ஷை தரிக்க வேண்டும், கல்யாணம் முடிந்தப்புறமும் இது கையில் இருக்கும்வரை இருக்கலாம். தப்பில்லை. பெண் வீட்டிலும் நாந்தி சிராத்தம் செய்வது உண்டு. அது குறித்து போன பதிவிலேயே குறிப்பிட்டு விட்டேன்.

அடுத்த முக்கியமான ஒன்று பாலிகை தெளித்தல்.(அங்குரார்ப்பணம்) எனச் சொல்லுவார்கள். இது முழுக்க முழுக்க இரு வீட்டுப் பெண்களாலும் செய்யப்படும். இது கல்யாணத்திலும், உபநயனம் எனப்படும் பூணூலிலும் உண்டு. பயிர்கள் நன்கு செழித்து வளர்வது போல் திருமணம் நன்கு நடந்து அந்தக் குடும்பமும் நன்கு செழித்து வளர்வதற்காகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. திருமணம் நடைபெறும் தினத்திற்கு முன்னர் வரும் ஒற்றைப்படையான தினத்தில் மந்திரோக்தமாகச் செய்யப்படும் ஒன்று இது. உதாரணமாக வெள்ளிக்கிழமை கல்யாணம் எனில் அதற்கு முந்தைய புதன், திங்கள் ஆகியன ஒற்றைப்படை தினமாக வரும். பாலிகைகள் தெளித்தலின் போது பயன்படுத்தப்படும் மண் கலசத்திற்குப் பாலிகா என்று பெயர். மண் கலசத்திலேயே பாலிகைகளைத் தெளிப்பார்கள். கூரான இலைகளையுடைய பயிருக்கும் பாலிகா என்ற பெயர் வரும். மண் கலசங்களில் ம்ந்திரோக்தமாகத் தெளிப்பார்கள். விதைகள் தெளிக்கையில் தனித்தனியாக மந்திரம் சொல்வார்கள். இந்த உறவு நன்கு பல்கிப் பெருகி வளரவேண்டி, ப்ரஹ்மா, இந்திரன், யமன், வருணன், ஸோமன் ஆகிய தேவதைகள், பரிவாரங்களை ஆவாஹனம் செய்து ஓஷதி என்னும் வேத மந்திரங்களையும், ஸூக்தமும் சொல்லி ஜபித்துப் பாலிகையைத் தெளிப்பார்கள். இதற்குத் தனியாக ஏதும் சாமான்கள் தேவையில்லை. ஐந்து பாலிகைக் கிண்ணங்கள்/மண் கலசங்கள், முளைக்க வைத்த ஊறிய தானியங்கள், கொஞ்சம் பால் ஆகியவையே தேவை.

தெளித்த பின்னர் பஞ்சகவ்யத்தைப் ப்ரோக்ஷணம் செய்து மண்ணைப் போட்டு மூடுவார்கள். பின்னர் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் சுமங்கலிகளைக் கொண்டு பாலிகை விதைகள் ஊற வைத்த ஜலத்தை அப்பாலிகைகளில் தெளிக்கச் சொல்லுவார்கள். ஆனால் பெரும்பாலோர் அதில் இருக்கும் விதைகளையும் சேர்த்தே தெளிக்கின்றனர். இது கூடாது என்பதையும் ஜலம் மட்டுமே தெளிக்க வேண்டும் என்பதையும் எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே அறிந்து கொண்டேன். ஊற வைத்த தான்யங்களைத் தெளிப்பது கர்த்தாக்கள் மட்டுமே. அதாவது பிள்ளையின் அப்பாவும், பெண்ணின் அப்பாவும் மட்டுமே. பாலிகையைக் கரைக்கும்வரை அதற்கு யாரேனும் ஒரு சுமங்கலியை விட்டு நீர் வார்த்து விளக்கேற்றி, வழிபட்டு, நிவேதனம் செய்யச் சொல்வார்கள். இதைப் பெண் வீட்டில் தனியாகவும், பிள்ளை வீட்டில் தனியாகவும் செய்ய வேண்டும். இரு பாலிகைகளும் திருமணத்திற்குள் நன்கு வளர்ந்து விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் அல்லது குளக்கரையில் கரைப்பார்கள். அப்போதும் மந்திரங்களால் ஆவாஹனம் செய்த பிரம்மாதி தேவர்களை அதிலிருந்து எழுந்தருளப் பண்ணிப் பின்னரே நதியில் கரைக்க வேண்டும்.

(ஆனால் இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் பெரும்பாலான கல்யாணங்களில் பாலிகை தெளிக்கப்படுகிறது. பெண்ணின் தந்தை, பிள்ளையின் அப்பா போன்றோருக்கு இது குறித்த தெளிவு இல்லாததால் இதைக் குறித்து அதிகம் பொருட்படுத்துவது இல்லை. பாலிகைகளில் நீர் தெளிக்க அழைக்கும் பெண்களோ எனில் ஊற வைத்த விதைகளைத் தான் தாங்கள் தெளிக்க அழைப்பதாக நினைத்துக் கொண்டு அவ்வாறே செய்கின்றனர். ஒரு சில புரோகிதர்கள் மட்டுமே தண்ணீரை ஊற்றினால் போதும் என்கின்றனர். பொதுவாக இதைக் குறித்துப் புரோகிதர்களும் தெளிவு செய்வதில்லை. நான் தற்செயலாக அறிந்து கொண்டேன்.)

இதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள். இந்த ஆரத்தி எடுப்பது பிள்ளை வீட்டினர் தனியாகவும், சில சமயம் அவங்களுக்கு முன்னாடியே முடிஞ்சுடும். பெண் வீட்டினர் தனியாகவும் ஆரத்தி எடுப்பார்கள். கல்யாணத்தன்று தான் பொதுவில் ஆரத்தி.

மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக, மாப்பிள்ளை ஆக!       ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!


Designed and maintained by AKR Consultants