PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!

திருமண சம்ஸ்காரங்களில் இரு வீட்டாரின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாச் சமூகங்களிலும் இரு வீட்டார் பங்கு என்பது முக்கியமானது. முன் பதிவுகளில் சொல்லப்பட்டவை பிராமணர்களுக்கு என்றால் மற்ற சமூகத்திலும் சம்பிரதாயங்கள் இல்லாமல் போகவில்லை. ஒவ்வொருத்தருக்கும் அவரவர் குடும்ப, குல வழக்கப்படியான சம்பிரதாயங்கள் கட்டாயமாகவே கடைப்பிடிக்கப் படுகின்றன. மற்ற சமூகத்தினரில் பொன்னுருக்குதல் என்னும் திருமாங்கல்யத்துக்குப் பொன்னுருக்குவதை மாப்பிள்ளை வீட்டில் செய்வதை இன்னமும் பலர் கடைப்பிடிக்கின்றனர். அதன் பின்னரே கன்னிக்கால் ஊன்றுதல் என்னும் பந்தக் கால் முஹூர்த்தம் நடைபெறுகிறது. இது அநேகமாய் இரண்டு வீடுகளிலும் ஒரே நாள் ஒரே நேரம் அவரவர் வீடுகளின் ஈசான்ய மூலையில் கன்னிக்கால் ஊன்றப்பட்டு நடைபெறும். இதற்குப்பெரும்பாலும் கல்யாண முள்முருங்கை மரத்தின் கொம்புகளே பயன்படுத்தப் படுகின்றன. வீட்டுக்கு மூத்த முதியவர் ஒருவரால் அந்தக் கொம்பின் நுனியில் மஞ்சள் பூசப்பட்டு மாவிலைக்கொத்து கட்டப்பட்டு ஒரு துணியில் செப்புக்காசும் முடிந்து வைக்கப்பட்டு ஊன்றப்படும். பின்னர் மற்றவை அனைவருக்கும் இருப்பது போல் நவதானியம், காசுகள், நவமணிகள் போன்றவற்றை இட்டு 3 சுமங்கலிப் பெண்களால் பால் ஊற்றப்பட்டுக் கீழே பூமியிலிருந்து கொம்பு தெரியும் அடிப்பக்கம் திருநீறு, குங்குமம், சந்தனம் பூச்சப்படும்.. ஒரு சிலர் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டும் பந்தக்கால் ஊன்றுகிறார்கள். இது அவரவர் குடும்ப வழக்கப்படி செய்வார்கள். பந்தக்கால் ஊன்றிய பின்னர் இரு வீட்டினரும் எந்தவிதமான துக்க நிகழ்விலும் பங்கெடுக்க மாட்ட்டார்கள்.

மற்ற சமூகத்திலும் முளைப்பாலிகை போடுவது உண்டு. ஆனால் இது அநேகமாய்ப் பெண் வீடுகளிலேயே நடைபெறும். மூன்று அல்லது ஐந்து மண் கலசங்க்களில் மண் பரப்பி நீர் ஊற்றிப் பாலில் ஊற வைத்த நவதானியங்களை 3 அல்லது ஐந்து சுமங்கலிப் பெண்கள் தூவிவிட்டுப் பாலும், நீருமாய்க் கலந்து விடுவார்கள். மூன்று முறைகள் விதை தெளிப்பார்கள். பின்னர் வீட்டின் பூஜையறையில் அவை வைக்கப்பட்டிருக்கும். திருமணதினத்தன்று மணவறைக்குக் கொண்டு செல்வார்கள். அநேகமாகப் பிள்ளை வீட்டினர் பொன் உருக்கும் தினத்தன்று பெண் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். "

"சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்" 60

எனச் சிலப்பதிகாரத்தில் வருவது போல் முளைப்பாலிகை என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருந்து வருவது தெரிகிறது. மற்றப்படி பந்தல் அமைப்பது, அலங்காரங்கள் செய்வது, சத்திரங்களில் கல்யாணம் நடந்தால் தாங்கள் இருக்கும் வீடுகளிலும், சத்திரத்திலும் குலை தள்ளிய வாழைமரங்களைக் கட்டுவது போன்றவை நடக்கும். வாழை ஒரே முறை குலை தள்ளினாலும், அதன் சந்ததியானது தொடர்ந்து வரும். அதைப் போல் நம் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரே முறை தான் ஆனாலும் நம் சந்ததியும் வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்பதைச் சுட்டவே மங்களமாக வாழைமரம் கட்டுவார்கள். பாக்கு மரங்களாலும் அலங்கரிக்கப்படும். பாக்குக் கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து பல நன் மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பது இதன் ஐதீகம். தென்னை மரத்தின் தேங்காயும் இப்படியே தென்னை மரம் கற்பகத் தருவாகக் கருதப் படுவதால் திருமணத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆயிற்று, விரதம் முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துண்டாச்சா? மதியம் இரண்டு மணிக்குக் காஃபி குடிப்பவர்களுக்குக் காஃபியும், தேநீர்க்காரங்களுக்குத் தேநீரும் அளிக்கப்படும். சரியா மூணு மணிக்கு டிஃபன் இலை போடுவதாகத் தலைமை சமையல்காரர் சொல்லி இருக்கார். ஆகவே எல்லாரும் டிஃபன் சாப்பிட்டுட்டு அலங்காரங்கள் முடிந்து நிச்சயதார்த்தத்துக்குத் தயாரா இருக்கணும். சரியா? :))

பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக அனைவரையும் வந்து அழைத்துவிட்டுச் செல்வார். அதே போல் பெண்ணின் அப்பாவும் ஆண்கள் தரப்பில் சொல்லுவார்.

மாப்பிள்ளை அழைப்பு உண்டா? ஆஹா, உண்டு, உண்டு. நிச்சயம் உண்டு. அலங்கரிக்கப்பட்ட கார் அல்லது சாரட் வண்டி ஏற்பாடு பண்ணணுமே! பண்ணியாச்சு! அதிலே பாதி வழியிலே பெண் போய்க் கூட உட்கார்ந்து சத்திரம் திரும்பும்போது வருவாளே, பெண்ணைத் தயார் செய்ய வேண்டாமா?

இல்லை, பிள்ளை வீட்டில் அது பழக்கம் இல்லையாம். சும்மா சத்திரத்து வாசலிலே ஆரத்தி எடுத்துப் பிள்ளையை உள்ளே அழைக்கையில் சேர்த்து உட்கார வைத்துப் படம் பிடிச்சால் போதும்னு அபிப்ப்ராயப் படறாங்க.

அப்படியா, சரி அப்படியே செய்துடலாம். இதில் எல்லாம் வருத்தம் வரக்கூடாது.

ரெண்டு பேருக்கும் மாலை போட ஆனை வந்திருக்கு! என்ன ஆனையா?? ஆனையைக் கட்டி யார் தீனி போடறது?

அட, அதெல்லாம் பெண்ணின், பிள்ளையின் நண்பர்கள் ஏற்பாடாம்!

அது சரி, நிச்சயம் சத்திரத்திலா? கோவிலிலா?

அதான் மாப்பிள்ளை அழைப்பு உண்டுனு சொல்லிட்டீங்களே, அதனாலே பிள்ளைக்கு மாப்பிள்ளை அழைப்பு டிரஸ் கொடுப்பதை அங்கே வைச்சுண்டு மாப்பிள்ளை அழைத்துச் சத்திரம் திரும்பியதும் நிச்சயம் வைச்சுக்கலாமா? நேரம் ஆயிடாதோ?

அப்போ ஒண்ணு செய்யலாம். இரண்டு வீட்டினரும் தனித் தனிக் காரில் கோயிலுக்குப் போயிட்டு வந்து, இங்கே நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை அழைக்கலாம்.

இல்லை, இல்லை, இங்கே சத்திரத்து வாசலிலேயே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. இரண்டு வீட்டுக்காரங்களும் அங்கே போயிட்டு வந்துடுங்க. அப்புறமா நிச்சயம் பண்ணிக்கலாம்.

அப்பாடா, சாஸ்திரிகள் சரியாத் தான் சொல்லி இருக்கார், அப்படியே செய்துடலாம். சீக்கிரமா நிச்சயதாரத்தத்துக்குத் தயாராகுங்கப்பா எல்லாரும். அதுக்குள்ளே நிச்சயதார்த்ததுக்கு வேண்டியவற்றைத் தயார் பண்ணிடுங்க யாரானும்'

அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம். நீங்க நிம்மதியா கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை பண்ணிட்டு வாங்க.

பாலிகை படம் நன்றி: அகோபிலம் தளம்.

நிச்சயதார்த்த அலங்காரம் படம் சொந்தம்! :))

மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ!       மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு!


Designed and maintained by AKR Consultants