PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

நான் பஞ்சாக்னி வித்யை காரிகை எல்லாம் படித்தது இல்லை. ஆனால் பஞ்சாக்னி குறித்து மட்டும் ஓரளவுக்குத் தெரியும். இது நம் பிராணன், அபாநன், வ்யாநன், உதாநன், சமாநன் ஆகியவற்றோடு இந்தப் பஞ்சாக்னி சம்பந்தப்பட்டது. அவை ஒவ்வொன்றும் நம் உடலில் இந்தப் பஞ்சப் பிராணன் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டு இருத்தல் வேண்டும். ஆழ்ந்து படித்தோமானால் ஒவ்வொன்றும் தெளிவான ஆன்மிகப் பாதையில் இட்டுச் செல்லும்படி இருக்கும். இன்றைய கால கட்டத்தில் வெறும் சடங்காகி விட்டது.

பஞ்சாக்னிகள் என்பவை:

கார்ஹபத்யம்: குலதெய்வம் போன்றது. இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் வைதிகனுக்கு இது முக்கியமாக எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆஹ்வனீயம்: ஆஹூதிகள் அளிப்பதற்கென ஏற்படுத்தப்பட்டது.

தக்ஷிணாக்னி: சந்தோஷம் தரக் கூடியது. தென் திசையில் நிறுவப்படும்.

ஸப்யம்: சாக்ஷிரூபமாக இருப்பதால் இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துவது.

ஆவஸத்யம்: வீட்டிற்கு மங்களங்களைத் தரும் அக்னி

கடைசி இரண்டு அக்னிகளும் மிகவும் விஷயம் தெரிந்தவர்களாலேயே சேர்க்கப்படும். இவை அனைத்தும் விடாமல் எரிந்து கொண்டிருப்பதே சரியான முறை. அக்னிஹோத்ரிகள் என இவர்களையே நாம் சொல்வோம். இல்லறத்தார்களால் இந்த யாகங்கள் தொடர்ந்து செயல்படுவது போலவே(உலக க்ஷேமத்துக்காக) நம் உடலில் பஞ்சப் பிராணன்களும் தொடர்ந்து செயல்படும். பிராண சக்திகள் ஓய்வதில்லை என்பதைச் சுட்ட ஏற்படுத்தப்பட்டவை என்றும் கூறலாம். இது கொஞ்சம் எளிமையா விளக்கம் தான். ரொம்பவும் விளக்கிச் சொல்லுவது சரியாக இருக்காது. ஏனெனில் இந்த அக்னி எல்லாம் பரம்பரையாக வரும். விளக்கங்கள் நிறைய இருக்கும். இழையின் நோக்கம் மாறுபடும் என்பதோடு இவை அவரவர் குரு மூலம் விஷயங்களை நன்கு புரிந்து கொண்டு எதற்காகச் செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு செய்யவேண்டியது. கவனம் தேவை.

சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்!    


Designed and maintained by AKR Consultants